வியாழன், செப்டம்பர் 15, 2011

உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன் நடிகர் சூர்யா

ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகிறார்.   அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அது 9841091000.
விரிவான செய்திக்கு இங்கு கிளிக் செய்யவும்
http://www.tamilstar.net/news-id-agaram-foundation-surya-15-09-113535.htm

ரியாத்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வேலைக்காக வந்து சாப்பிடக் கூட வழியில்லாமல் தவித்த 18 தமிழர்கள் உள்ளிட்ட 70 இந்தியர்களுக்கும் நாளைக்குள் வேலை கிடைக்க ரியாத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக அதன் செயலாளர் இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.
இம்தியாஸ், செயலாளர் - ரியாத் தமிழ்ச் சங்கம்.
தொலைபேசி எண் +966506972461
பட்டதாரிகள் தொழில் துவங்க ரூ.25 லட்சம் மானியம்
 புது தொழில் துவங்க உள்ள பட்டதாரிகளுக்கு ரூ. 25 லட்சம் மானியத்துடன் " நீட்ஸ்' திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. புது தொழில் துவங்கும் பட்டதாரி, தொழில் நுட்ப படிப்பு முடித்தவர்களுக்கு, அரசு தொழில் துறை சார்பில், ஒரு கோடி மதிப்பீட்டில் ரூ. 25 லட்சம் மானியத்துடன கடன் வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக "நீட்ஸ்' என்ற பெயரில் புது திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் 21 வயது பூர்த்தியடைந்தவர்களுக்கு ,தொழில் முதலீட்டு கழகம், தேசிய வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட உள்ளது. இது தவிர, கூடுதலாக மின்சாரம், ஜெனரேட்டர் மானியம், கடன்களை உரிய முறையில் திருப்பி செலுத்துபவர்களுக்கு, வட்டியில் 3 சதவீதம் மானியமும் வழங்கப்பட உள்ளது. 

நீட்ஸ் திட்டத்தில் தொழில் துவங்க விண்ணப்பம் செய்பவர்களை, கலெக்டர், தொழில் மைய பொது மேலாளர், தொழில் முதலீட்டு கழகம், தாட்கோ, முதன்மை வங்கி மேலாளர், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதி கொண்ட குழு தேர்வு செய்யும். மாவட்டத்தில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, சென்னை தொழில் மேம்பாட்டு பயிற்சி நிறுவனத்தில், இரு வாரங்கள் பயிற்சி வழங்கப்பட்டு, அதன் பின் கடன் வழங்கப்பட உள்ளது.இதன் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளனர். 

தகவல் களஞ்சியம்
http://atozthagavalkalangiyam.blogspot.in/2012/04/blog-post_193.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக